• Jan 15 2025

சமந்தாவை காத்திருந்து பழிவாங்கிய நாக சைதன்யா..! இன்றே நிச்சயதார்த்தம் செய்ய இதுதான் காரணமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்றைய தினம் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நாகர்ஜுனா வீட்டில் நடைபெற்று உள்ளது. 

இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் நாகர்ஜுனா.

2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா. எனினும் இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2021 ஆம் ஆண்டு இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்கள்.

அதன் பின்பு கடந்த சில மாதங்களாகவே நாக சைதன்யாவும் சோபிதாவும் டேட்டிங் செய்து வந்தார்கள். சமந்தா பிரிந்து சென்ற சில மாதங்களிலேயே இவர்களுடைய காதல் கதை தொடங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் நாக சைதன்யாவும் சோபிதாவும் ஹைதராபாத்தில் முதல் முதலாக ஒன்றாக காணப்பட்டார்கள். சோபிதா தனது மேஜர் படத்தை விளம்பரப்படுத்த அங்கு வந்தார். அதே மாதம் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக முடிவும் செய்திருந்தார் சோபிதா.


மே 31 ஆம் தேதி நடந்த சோபிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நாக சைதன்யாகவும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர்களுடைய நட்பு ஆரம்பமானது. அந்த நட்பு வலுவடைந்து காதலாக மாறியது. இறுதியில் அவர்கள் டேட்டிங் செய்ய தொடங்கினார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகள் உறவில் இருந்த இருவரும் ஒன்றாக வெக்கேஷன் கூட சென்றார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகை சமந்தா நாக சைதன்யாவை லவ் ப்ரொபோஸ் செய்த அதை ஆகஸ்ட் எட்டாம் தேதி, தற்போது நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த தகவலும் தற்போது இணையத்தில் உலா வருவதோடு இது சமந்தாவுக்கு பலத்த அடியாக இருக்கும் எனவும் பழிக்கு பழி  வாங்குவதற்காகவே நாக சைதன்யா இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement