• Jan 18 2025

பிரபல நடிகையுடன் நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்.. அப்ப சமந்தா நிலைமை?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


நடிகர்  நாக சைதன்யாவுக்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் அப்போ சமந்தாவின் நிலைமை என்ன? என ரசிகர்கள் ஆதங்கமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 நடிகர்  நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடங்களில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர் என்பதும் சட்டரீதியாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் விவாகரத்துக்கு பிறகு அடுத்த திருமணம் என்பதை பற்றி சமந்தா யோசிக்கவே இல்லை என்பதும் அவர் தனது உடல்நிலை மற்றும் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.



ஆனால் அதே நேரத்தில் பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இன்று இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக கூறப்படுவது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சோபிதா துலிபாலாவுடன் ஏற்பட்ட நெருக்கம்தான் நாக சைதன்யா - சமந்தா பிரிவுக்கு காரணம் என்று கூறப்படும் நிலையில் இருவரும் சில ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று நாக சைதன்யா - சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டாலும் இருவர் தரப்பிலிருந்து இது குறித்த எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை நிச்சயதார்த்தம் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை சோபிதா துலிபாலா தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வரும் நிலையில் தமிழில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement