• May 19 2024

இந்த நடிகருடன் நடிப்பதே என்னுடைய ஆசை.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஓபன் டாக்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று திரையுலகமே பொறாமைப்படும் அளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விஜய். அதாவது தனது 10-ஆவது வயதில் ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் ‘நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படத்தின் ஊடாகவே நாயகனாக அறிமுகமாகியிருந்தார்.

இவரது திரையுலகப் பயணத்தில் திருப்பு முனையாக அமைந்த படம் ‘பூவே உனக்காக’ என்ற படம் தான். தனது நடிப்பினாலும், நடனத்தாலும் பல விருதுகளை வென்ற இவர் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாது இவர் தமிழ் சினிமாவில் தனது சொந்தக் குரலிலேயே ஒரு சில பாடல்களையும் பாடிப் பாராட்டும் பெற்றிருக்கின்றார்.

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை கண்மனி.

அத்தோடு தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் எனும் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை கண்மணி அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் 'விஜய்யுடன் நடிப்பது என்னுடைய ஆசை மற்றும் கனவு' என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement