• May 12 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் மாற்றப்படும் முல்லை.. இவருக்குப் பதில் யார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். எதார்த்தமான கதைக்களத்தில் அண்ணன்-தம்பிகள் பாசத்தை உணர்த்தி, கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டி வருகிறது இந்த தொடர்.

இந்த சீரியலில் ஆரம்பகாலத்தில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அந்த நேரத்தில் அவருக்கு பதிலாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் காவியா அறிவுமணி.

தற்போது திரைப்படங்களில் இவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இவரும் இவர் சீரியலில் இருந்து விலக இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

இனி முல்லை கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்க இருக்கிறார் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

அத்தோடு இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் விரைவில் பாக்கியலட்சுமி குடும்பத்தோடு சேர்ந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement