• May 18 2024

நடிகர் என்பதை விட ரேஸ் கார் ஓட்டுபவராக இருப்பதே எனக்குப் பிடிக்கும்-அஜித்தின் வைரலாகும் பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகர் தான் அஜித். இவர் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பின்பு வாலி,முகவரி,வில்லன், காதல் கோட்டை, காதல் மன்னன், அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்

அத்தோடு ரசிகர்கள் இவரை AK என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் அன்புடன் அழைத்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் பல வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது அந்த பேட்டியில் அஜித் தன்னை ஒரு மோட்டார் ஸ்போர்ட் பிரியர் மற்றும் பந்தய வீரராக அடையாளப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.

படப்பிடிப்பை ரசிப்பதாகவும், அதே சமயம் மோட்டார் கார் பந்தய வீரராகவும் இருப்பதை விரும்புவதாகவும் கூறியுள்ளார். சினிமா துறையில் தான் இருக்க வேண்டும் என்பதற்காக சுமார் 18 ஆண்டுகள் போராடியதாகவும், தனது கனவு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கப்படாமல் ஒரு மதமாக பார்க்கப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். கார் பந்தயத்தின் மீதான தனது எதிர்பார்ப்பும் அதேதான் என்று கூறிய அஜித் ஒரு சிறந்த ரேஸ் கார் டிரைவர், ஆனால் தன்னை ஒரு அற்புதமான அல்லது சிறந்த பந்தய வீரர் என்று அழைக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். அவரது பேட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement