தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இதனால், வட தமிழக கடற்கரையை நோக்கி நகர துவங்கிய இந்த புயலால் டிசம்பர் 4ந் தேதி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்துவிட்டது.
இதனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான ஆறுகள் நிரம்பிவிட்டதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மார்பளவு தண்ணீர் இருந்ததால், பலர் முதல் தளத்திலும் மொட்டை மாடியிலும் தஞ்சம் அடைந்தனர்.
அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர் மீட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், 50 மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுளளனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.
இந்த நிலையில், விஜய் டிவி பிரபலமான பாலா இன்றைய தினம் அவரது குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 1000 வீதம் 200 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்க இருக்கிறார்.
அதன்படி, அங்கிருக்கும் குடும்பங்களுக்கு மொத்தமாக 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க இருக்கிறார்.
அத்துடன், நடிகர் சூர்யா, கார்த்திக், ஜி.வி பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் வரிசையில் பாலா செய்திருக்கும் உதவி பலருடைய பாராட்டை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!