விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலம் ஆனவர் தான் ஜாக்குலின் லிடியா. இவரின் இயல்பான வசீகரத் தோற்றமும் கலகலப்பான பேச்சும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தது.
கனாக்காலம் காலங்கள் என்ற சீரியலில் அறிமுகமான இவர், தேன்மொழி பி. எ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். மேலும் ரக்ஷனுடன் இணைந்து கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வெள்ளித் திரையிலும் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராகவும் பங்கு பற்றினார். அதில் ஜாக்குலின் கடைசி பைனலுக்குள் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் பணப்பெட்டி டாஸ்க்கில் எதிர்பாராத விதமாக எலிமினேட் ஆனார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில், ஜாக்குலின் லிடியா தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்துள்ளார். அதன்படி யுவராஜ் செல்வநம்பி என்பவரை காதலிக்கும் ஜாக்குலின், அவருடன் ஜோடியாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஜோடிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!