• Oct 16 2024

ரோகிணி போட்ட கண்டிஷனுக்காக திருந்திய மனோஜ்! முத்துக்கு சரியான பதிலடி? அசிங்கப்பட்ட மீனா... விஜயா மானமும் போச்சு..!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. அதில் இன்று வெளியான எபிசோடில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், முத்து மனோஜை வேலை இல்லை என குத்திக் காட்ட, ரூம்க்கு வந்த ரோகிணி மனோஜ் மீது கோவத்தைக் கொட்டித் தீர்க்கிறார். அத்துடன், இன்டைக்கு எப்படி என்றாலும் ஒரு வேலை எடுத்துட்டு தான் வீட்டுக்கு வரணும் என கண்டிஷன் போடுகிறார்.

இதை தொடர்ந்து, ஹோட்டலுக்குஆட்கள் தேவை என்ற போஸ்டரை பார்த்து விட்டு அங்கு சென்ற மனோஜ்க்கு, சப்ளையர் வேலை கிடைக்கிறது.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மனோஜ், எல்லாரையும் அழைத்து தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொல்லி அல்வா கொடுக்கிறார். இதன்போது பேசிய முத்து, வேலைக்கு போன முதல் நாளே யாரு உனக்கு சம்பளம் தருவா? தினக்கூலிக்கு தான் அப்படி கொடுப்பாங்க.. எங்கையோ இடிக்குது என சொல்ல, இந்த கம்பெனி ரொம்ப வித்தியாசம், முதல் நாளே சம்பளம் கொடுப்பாங்க என மனோஜ் சொல்கிறார். விஜயா சந்தோஷத்தில் என்ட கௌரத்வத்தை காப்பாத்திட்டா என சந்தோசப்படுகிறார்.


பின்பு மனோஜ், ரோகிணி ரூம்க்கு செல்ல, அங்கு ரோகிணி சந்தோஷப்பட்டாலும், என்ன வேலை என்று கேக்க மனோஜ் சொல்ல மறுக்கிறார். திருடல, யாரையும் ஏமாத்தல நல்ல வேளைக்கு தான் போறேன் என சொல்கிறார். ரோகிணி சந்தோஷத்தில் அவரை கட்டிப் பிடிக்கிறார்.

இன்னொரு பக்கம் மீனாவின் பூக்கடைக்கு வந்த பெண்மணி ஒருவர், மீனா எங்க உன்ட தாலி? ஏன் மஞ்சள் நூல்ல போட்டு இருக்கா? மாமியார் கொடும பண்ணுறாங்களா? என விசாரிக்க, அப்படி எல்லாம் இல்லை, என் மாமியார் என்னை அவங்க பொண்ணு போல பாக்கிறாங்க.. என் தாலி கடைக்கு குடுத்து இருக்கு..அதுல சின்ன டேமேஜ் என சொல்லி சமாளிக்க, அந்த நேரத்தில் விஜயா, உனக்கு கூப்பிட்டா விளங்காதா? எல்லாரும் வேலைக்கு போகணும் வந்து டிபன் செய், முதல்ல கடைய ஒழிக்கணும் என திட்டிச் செல்கிறார்.

அந்த நேரத்தில் அண்ணாமலையும் அங்கு வர, அந்த பெண்மணி மீனாவிடம், உங்க மாமியார் நல்லம் என்றா ஆனா அப்படி தெரியலையே என மீனாவிடம் பேசுகிறார். இதைக் கேட்டு விட்டு உள்ளே செல்கிறார் அண்ணாமலை. மீனாவும் இதையடுத்து ரொம்ப டென்ஷனாக காணப்படுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement