• Jan 19 2025

நீல நிலவே சோங் இப்படி ஆகும்னு எதிர் பார்க்கவேயில்ல... தெரிஞ்சித்தான் சந்திரமுகி படத்துல நடிச்சேன்... மஹிமா நம்பியார் ஓபன் டாக்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஹிமா நம்பியார் பல சுவாரஷ்யமான தகவல்களை கூறி இருக்கிறார்.


பேட்டி காண்பவர் இந்த வருடம் உங்களது 5 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கு எப்படி பீல் பண்ணுறீங்க என்று கேற்க அதற்கு மஹிமா ரொம்பவும் ஹாப்பியா இருக்கு ஒரு ஹாட்டிஸ்ட் எதிர்பாக்குறது அதானே. நான் 12 படிக்கும் போதே சாட்டை படத்துல ஒர்க் பண்ணினன். அதுனாக காலேஜ்க்கு கூட exam மட்டும் போய்ட்டு வந்துருவேன், நல்லா படிக்குற பொண்ணுதான் நான் அதுனால ஒருமாதிரி பாஸ் ஆகிட்டான்.


நீல நிலவே சோங் இப்ப ரொம்ப பேமஸா போயிட்டு இருக்கு என்ன நிறைய பேர் டேக் பண்ணி போடுவாங்க. நான் அதுல பண்ணின மினி கேரக்டர் வந்து வெளிய நிறைய பேருக்கு புடிச்சி இருக்கு அந்த வகையில சந்தோசம் தான். இந்த சோங் ரொம்ப நல்லா வரும் அப்டினு இயக்குனர் ரொம்ப நம்பிக்கை கொடுத்தாரு அதே மாதிரி இப்ப நடந்துட்டு இருக்கு.


ரத்தம் திரைப்படத்துல நான் வில்லியா நடிச்சது முதல் முறை இது நான் இயக்குனர் கிட்ட கேட்டேன் ஏன்  என்ன வில்லியா வச்சீங்க என்று அவரு சொன்னாரு உன்ன பாக்க அழகா குழந்தை தனமா இருந்தாலும் ஒரு சைட்ல வில்லுக்கு சரியா செட்டாகும் என்று சொன்னாரு. ரத்தம் பார்ட் 2 வருமா என்று கேட்டா தெரிய இல்ல சரியா என்று கூறினார். 

மேலும் சந்திரமுகி படம் அது ஒரு வகையான படம் கொஞ்சம் வித்தியாசமானது எல்லாம் தெரிஞ்சித்தான் நான் அதுல நடித்தேன். எல்லா வகையான படங்களையும் ட்ரை பண்ணி பார்க்கணும். அதேசமயம் காசு கொடுத்து டிக்கட் வாங்கி படம் பாக்குற மக்களுக்கு உரிமை இருக்கு படம் தொடர்பாக விமர்சனம் சொல்லுவதற்கு என்று ரொம்ப அழகாக தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்திருந்தார். 

Advertisement

Advertisement