• Jan 18 2025

இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போவதை அறிவித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்- வெளியாகிய Pregnancy போட்டோ ஷுட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பப்பபட்டு வருகின்றது. ஆனால் தமிழ் சீரியல்கள் ஔிபரப்பப்பட முதல் ஏராளமான பாலிவூட் சீரியல்களே ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தன.


இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமான சீரியல்களில் ஒன்று தான் சின்னமருமகள். இதில் தேவா- ராதிகாவின் காதலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமும் காணப்பட்டது. இந்த சீரியலில் ராதிகா என்னும் கதாநாயகி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் ரூபினா திலாக்.


இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனவர்.இதனை அடுத்து தற்பொழுது படவாய்ப்புக்களைப் பெற்று நடித்தும் வருகின்றார்.


2018 இல் தொலைக்காட்சி நடிகர் அபினவ் சுக்லாவை திலாக் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு கர்ப்பமாக இருக்கும் இவர் நடத்திய போட்டோஷுட் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement