தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லன் கேரக்டரிலும் நடித்து மிரட்டுபவர் தான் விஜய் சேதுபதி. இவர் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படுகின்றார் . இவருக்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து பிசியான நடிகராக வலம் வருகின்றார்.
விஜய் சேதுபதி இதுவரையில் 50 படங்களில் நடித்துள்ளார். இவரின் 50வது படமாக வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகனதாஸ், அபிராமி என பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
மகாராஜா திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 100 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை படைத்திருந்தது.
விஜய் சேதுபதியின் கேரியரில் அவர் ஹீரோவாக நடித்து 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிய முதல் படமாக மகாராஜா காணப்படுகின்றது. இந்த படம் மொத்தமாகவே 110 கோடிகளை வசூலித்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மகாராஜா திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஓடிடியில் சுமார் 150 கோடி வரை இலாபம் சம்பாதித்துள்ளதாம். அதாவது இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 17 கோடிக்கு வாங்கி உள்ளது.
ஆனால் மகாராஜா ஓடிடியில் 2 கோடி பார்வையாளர்களை கடந்த காரணத்தினால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதைவிட பத்து மடங்கு லாபம் பார்த்துள்ளது. இதேவேளை மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் 110 கோடி வரை தான் வசூலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!