• Sep 28 2024

மாவீரன் ரிலீஸ்.. அன்புத்தம்பிக்கு, அண்ணன் சூரி சொன்ன வாழ்த்து...! ரசிகர்களிடையே வைரலாகும் ட்வீட் ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாவீரன். பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதால் நிச்சயம் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது.

அதிகாலை காட்சிகள் எந்தப் படத்துக்கும் இல்லை என்ற சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருப்பதால் காலை 9 மணிக்கு மாவீரன் முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஆவலோடு திரையரங்குக்கு சென்று மாவீரனை பார்த்தார்கள். படத்தை பார்த்த பிறகு முதல் பாதி அட்டகாசமாக இருக்கிறது. இரண்டாம் பாதியும் சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் சிவகார்த்திகேயனின் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிடும் என்கின்றனர் ரசிகர்கள்.

மடோன் அஸ்வினின் கதைக்களமும், மேக்கிங்கும் படத்துக்கு எப்படி பலமாக இருக்கிறதோ அதேபோல் சிவகார்த்திகேயனின் நடிப்பும் அருமையாக இருக்கிறது. 

சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் மாவீரன் படத்தை பார்த்து ரசித்தார். அதேபோல் நடிகை அதிதி ஷங்கரும் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தார். சிவகார்த்திகேயன் திரையரங்குக்குள் நுழைந்தபோது ஒட்டுமொத்த தியேட்டரும் ரசிகர்களின் கரகோஷத்தாலும், விசில் சத்தத்தாலும் அதிர்ந்தது. ஆகமொத்தம் மாவீரன் படம் சிவாவின் அடுத்த சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்களில் நடித்தவரும், அவருக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் படம் குறித்து, ""மாவீரன்"திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அன்புத்தம்பி சிவகார்த்திகேயனுக்கும், அன்புத்தம்பி அருண் விஸ்வாவுக்கும் (மாவீரன் படத்தின் தயாரிப்பாளர்) மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement