இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள பயமறியா பிரம்மை படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் , படத்தின் டீசர் என அடுக்கடுக்காக வெளியான படத்தின் அப்டேட் மக்களை பெரும் எதிர்பார்ப்பில் தள்ளியது. இப் படத்தை 69 எம் எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கடந்த 13 ஆம் திகதி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வைத்த படத்தின் ட்ரைலரானது மக்களை எதிர்பார்ப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது எனலாம்.மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் குரு சோமசுந்தரம் சிங்கிள் டேக்கில் படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த மாத இறுதியில் படத்தை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில் படத்தின் வெளியீடு தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது."பயமறியா பிரம்மை" திரைப்படமானது வருகிற ஜூன் 21 முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!