• Apr 24 2026

கல்யாண போட்டோவை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.. அண்ணியார் என கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் ஒரு திருமண விழாவுக்கு சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு பலர் ’அண்ணன் எப்படி இருக்கிறார்? அண்ணியார் என்பது போன்ற கிண்டல் செய்யும் கமெண்ட்களை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் நடித்த ’பருவு’ என்ற வெப் தொடர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு மிகவும் நெருக்கமான அனி மற்றும் ஏகேஸ் ஜோடியின் திருமணத்தில் நிவேதா பெத்துராஜ் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ’அண்ணியார்’ என்றும் ’அண்ணன் எப்படி இருக்கிறார்’ என்றும் கமெண்ட்களை பதிவு செய்து நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

நிவேதா பெத்துராஜ் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு பிரபலம் துபாயில் பங்களா வாங்கி கொடுத்ததாக வதந்தி கிளம்பிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய நிவேதா பெத்துராஜ், தற்போது தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார் என்பதும் தெலுங்கு ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement