• Jun 26 2024

பேய் ஓட்ட சாமியாரை தேடிய முத்து.. மீனாவை அசிங்கப்படுத்தி பல்பு வாங்கிய விஜயா

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயாவுக்காக எல்லாரும் வெளியில் காத்திருக்க விஜயா பரதநாட்டிய கேட்டபில் வந்து எல்லோரையும் பயமுறுத்துகின்றார். இதனால் முத்து நான் போய் பேய் ஓட்டுற  சாமியார கூட்டிட்டு வாரேன் என்று சொல்ல, உங்க அம்மாவையா பேய் பிடிச்சிருக்கு என்று அண்ணாமலை கேட்கின்றார்.

அதன்பின், ஸ்ருதி அழகா இருக்கீங்க ஆண்டி என்று சொல்லி உங்களுக்கு பரதநாட்டியம் தெரியுமா என்று கேட்க, அவரை கல்யாணம் பண்ணில இருந்து  நான் இதெல்லாம் மறந்திருந்தேன். இந்த சலங்கை ஒரு பெட்டிகள் அடங்கி கிடந்துச்சு. இப்பதான் திரும்பவும் என் காலுக்கு வந்திருக்கு இனிமே என் திறமையை வச்சு சம்பாதித்து எனக்காக மரியாதையை எடுத்துக்க போறேன் என்று டயலாக் விடுகிறார்.

அதன் பின்பு ரோகிணி, ஆண்டி பரதநாட்டிய கிளாஸ் ஆரம்பிக்க போறாங்க என்று சொல்ல, மீனாவும் பார்வதி ஆண்டி வீட்டுல தான் கிளாஸ் எடுக்க போறாங்க என்று சொல்லுகிறார். ஒருத்தருக்கு 2000 படி 40 பேர் வந்தால் மாதம் 80 ஆயிரம் சம்பாதிப்பேன் என விஜயா சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து ரோகிணி விஜயாவை வைத்து போட்டோ எடுக்கின்றார். அடுத்த நாள் பார்வதி வீட்டில் கிளாஸ் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை எல்லாம் தயாராக இருக்க, மீனா விளக்கு ஏற்றுவதற்கு ரெடி பண்ணுகிறார்.

இதன்போது பார்வதி விளக்கேற்றலாமா என்று கேட்க, முக்கியமான விஐபி வரவேண்டும் என்று விஜயா சொன்னதும் ஸ்ருதியின் அம்மா வந்து இறங்குகிறார். அவரை ஆர்த்தி எடுத்து வரவேற்று விளக்கு ஏற்ற வைக்கிறார். பின் ஸ்ருதி விளக்கு ஏற்றுகிறார். இதனால் ரோகிணி ஐடியா கொடுத்தது நான், ஆனா என்ன கூப்பிடலை என்று மனோஜிடம் புலம்புகின்றார்.

இதையடுத்து, ரோகிணி, பார்வதி விளக்கேற்ற, அண்ணாமலை எதற்கு மீனாவை கூப்பிடலை என்று கேட்கின்றார். அதற்கு விளக்கில ஐந்து முகம் தான் இருக்கு ஐஞ்சு பேர் தான் ஏற்ற  முடியும் என்று சொல்ல, பரவால மாமா விளக்கேற்றதற்கு நான் தான் திரி போட்டது அதுவே எனக்கும் சந்தோஷம் என பதிலடி கொடுக்கின்றார். முத்து அப்போ மீனா தான் அம்மாவோட கிளாஸ் தொடங்கி வச்சிருக்கா,  அவ விளக்கேத்த திரி போடவில்லை என்றால் இவர்கள் விளக்கேற்றி இருக்க முடியுமா என்று பல்பு கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement