• Apr 28 2024

'சந்திரமுகி-2' குறித்து வெளியான முக்கிய அப்டேட்... வடிவேலுவின் வீடியோவை வெளியிட்டு உறுதி செய்த லைகா..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினி ஜோதிகா பிரபு வடிவேலு உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.


ஆனால் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் கங்கனா ராணவத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அத்தோடு இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கின்றார். 


இப்படமானது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாக இருப்பதனால் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சந்திரமுகி பாகம் ஒன்றைப் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெறுமா என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது சந்திரமுகி-2 படத்தில் தனது டப்பிங் பணிகளை தற்போது வடிவேலு நிறைவு செய்திருகின்றார். இதுகுறித்த விடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விடயமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement