• May 20 2024

பேன்ட்-ஷர்ட் போட்டு ஆளே மாறிய தாமரை-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த வருடம் அக்டோபர் 3ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் 105 நாட்கள் ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் தேர்வானார், அடுத்து இடத்தை பிரியங்கா பிடித்தார்.

மேலும் மேடை நாடகங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை பார்த்து வந்தவர் தாமரை. கணவர், குழந்தையை தாண்டி அம்மா, சகோதரிகளையும் அவர் தான் கவனித்து வருகின்றார்.

பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்ட அவர் அனைவருடனும் நன்றாக போட்டிபோட்டு விளையாடி வந்தார். எனினும் அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்ற அவர் கடைசியில் வெளியேற்றப்பட்டார்.

இப்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை மற்றும் அவரது கணவர் ஜோடியாக களமிறங்கியுள்ளனர். அவர்கள் ஆடும் டான்ஸ் ரசிகர்களிடத்தே ரீச் ஆகிவிடும்.எப்போதும் புடவையில் தோன்றும் தாமரை முதன்முறையாக பேன்ட்-ஷர்ட் அணிந்து ஐக்கி பெர்ரியுடன் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ம தாமரையா இது என பார்த்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement