• May 19 2024

'75வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று முதல் ஆரம்பம்'- எந்த பிரபலங்கள் எல்லாம் போயிருக்கிறாங்க தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை கௌரவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருவது தெரிந்ததே. அந்த வகையில் பிரான்சில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா தான் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா .

இந்த விழா உலக அளவில் பிரபல்யமானதோடு இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த ஆண்டு கேன்ஸ் 75வது சர்வதேச திரைப்பட கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் இந்தியாவில் இருந்து மாதவன் இயக்கிய ராக்கெட்ரி, பார்த்தீபனின் இரவின் நிழல், ஏ.ஆர்.ரகுமானின் லெ மஸ்க் உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் இன்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் திரைப்பிரபலங்கள் ஏ.ஆர்.ரகுமான், நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement