• Sep 20 2024

கமலை கெட்ட வார்த்தையால் பேசிய லோகேஷ் கனகராஜ்-நடந்தது என்ன..? அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்தவகையில் தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் பகத் பாசில், சூர்யா ,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன்தாஸ் என பல முக்கிய நடிகர்கள் நடித்து உள்ளது பெரும் ஆராவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகலாவியரீதியில் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மேலும் இப் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒருவாரமே எஞ்சியுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஷியங்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி விக்ரம் படத்தின் முதல் காட்சியை கமலின் அலுவலகத்தில் படமாக்கியதாக தெரிவித்த லோகேஷ், அந்த காட்சியில் கமலின் கண்களை மட்டும் குளோஸ் அப் ஷாட் எடுத்ததாகவும்,அப்போது முதன்முறையாக கமல் நடிப்பதை நேரில் பார்த்த பூரிப்பில், அந்த காட்சி முடிந்ததும் கட் சொல்வதற்கு பதிலாக கெட்ட வார்த்தையில் கத்திவிட்டதாக கூறி உள்ளார்.இந்த விடயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.

https://www.youtube.com/embed/ufbPrihrMW0

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement