ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தேர்தல்களில் எந்த கட்சிக்கும் வாக்களிக்கும் வகையில் ரஜினிகாந்த் குரல் கொடுக்காமல் இருக்கும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரை பாஜக விடுவதாக இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய்யை தான் பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அவர் விவரமாக அரசியல் கட்சி ஆரம்பித்தது மட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, தனது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்று கூறி தப்பித்து விட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் மீது பாஜகவின் பார்வை பட்டுள்ளதாகவும் ஒன்று பாஜகவில் சேர்ந்து கட்சிக்காக குரல் கொடுங்கள் அல்லது குறைந்தபட்சம் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு குரல் கொடுங்கள் என்று கட்சியின் மேலிடத்தில் இருந்து நெருக்கடி வந்து கொண்டிருப்பதாகவும் ரஜினிகாந்த் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் ஒரு பாஜக ஆதரவாளர் தான் என்றாலும் அதை அவர் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருக்கும் நிலையில் தற்போது பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னால் தான் நடித்து வரும் அடுத்தடுத்த படங்கள் என்ன ஆகும்? தமிழகத்தில் ஆளும் கட்சியை பகைத்துக் கொண்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து யோசித்து வருவதாக தெரிகிறது.
இருப்பினும் பாஜக மேலிடம் நெருக்கடி கொடுப்பதால் அவர் வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!