• May 20 2024

விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்தில் லிப்லாக் காட்சி-ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடிப்பதில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்புக்களில் நடிப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக கே.ஜி.எப் திரைப்பட நடிகை ஸ்ரீ நிதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

 அதிலும் விக்ரம் தான் எதுவும் தெரியாத ஸ்கூல் வாத்தியார் என சொல்லும் காட்சி அப்படியே அந்நியன் படத்தை தான் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியது.

எனினும் தற்போது கோப்ரா படத்தின் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்படுத்தி இருக்கிறது. படத்தின் மொத்த ரன்டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அத்தோடு கோப்ரா படத்தில் இருந்து லிப்லாக் முத்தகாட்சியையும் சென்சார் போர்டு கத்திரி போட்டிருக்கிறது. சில இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளையும் மியூட் செய்து இருக்கின்றனர். 




Advertisement

Advertisement