• May 22 2024

லைகர் படம் 200 கோடியை விட அதிகமாகவே வசூல் செய்யும்- விஜய் தேவர்கொண்டாவின் பதிவை கலாய்த்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபல்யமான நடிகர் தான் விஜய்தேவர் கொண்டா. இப்படங்களைத் தவிர பல தெலுங்குப் படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் நோட்டா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் இன்றைய தினம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் லைகர். இந்தியளவில் ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிய திரைப்படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.


பெரிய வசூல் சாதனைகளை இப்படம் நிகழ்த்தாது என்றும் சொல்லப்படுகிறது.இதற்கிடையே விஜய் தேவர்கொண்டாவின் பழைய டுவிட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த வருடம் விஜய் தேவர்கொண்டா டுவிட்டரில் லைகர் திரைப்படத்தை ரூ. 200 கோடி கொடுத்து பிரபல OTT நிறுவனம் வாங்க உள்ளது என்ற தகவலின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு விஜய் தேவர்கொண்டா “மிகவும் குறைவு, நான் இதை விட அதிகமாக வசூல் செய்வேன்” என பதிவிட்டு இருக்கிறார்.இதனை ரசிகர்கள் வைரலாக்கி கலாய்த்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

இது தவிர இவர் குஷி ஞன கன மன என்னும் படங்களிலும் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement