• May 27 2026

கரூர் சம்பவம் தொடர்பில் சிபிஐக்கு பறந்த கடிதம்.. மீளுவாரா தவெக தலைவர்?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இதனால், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யும், தனது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

இதற்கு இடையில், விஜயை காதலித்து திருமணம் செய்து, கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கை அனுபவித்த சங்கீதா, திடீரென தனக்கு விவாகரத்து வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் பெரிய அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், தனது கணவருக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் தவறான உறவு இருப்பதாகவும், இது பற்றி பலமுறை கூறியும், விஜய் திருந்தவில்லை என சங்கீதா குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனால் விஜயின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் தாக்கங்கள் உருவாகியுள்ளன.


இன்னொரு பக்கம், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கிலும் விஜய் சிக்கியுள்ளார். இதற்காக மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில், கரூர் சம்பவ விசாரணையை சென்னையில் நடத்தக் கோரி, சிபிஐக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement