• May 20 2024

ரஜினியுடன் நடிப்பதற்கு நான்கு முறை மறுப்பு தெரிவித்த முன்னணி நடிகை.. கடைசியில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்தது.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

மேலும் இப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம்.

ஆம், முதலில் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் கேட்டார்களாம். அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

இதனை தொடர்ந்து வெளிவந்த பாபா, சந்திரமுகி, சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடிக்க ஐஸ்வர்யா ராய்யை கேட்டுள்ளார்களாம். அப்போதும் சில காரணங்களால் அவர் மறுப்பு சொல்லிவிட்டாராம்.

இதன்பின், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் படத்தில் தான், ரஜினியுடன் ஜோடியாக இணைந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய் என தற்போது தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement