• May 08 2024

சென்னையில் KGF2 திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்த டான் திரைப்படம்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார்.

அத்தோடு டான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதுவரை வெளியான கோலிவுட் திரைப்படங்களுக்கு இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை படைத்து வருவது டான் திரைப்படம் மட்டுமே என்றும் பேசப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமின்றி டான் திரைப்படம் மொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் டான் 30.75 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் சென்னையின் வார இறுதி வசூலில் இத்தனை நாட்கள் KGF 2 திரைப்படம் தான் டாப்பாக இருந்து வந்தது. ஆனால் தற்போது டான் திரைப்படம் அதிக வசூல் செய்து No.1 இடத்திற்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement