திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளத் திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.
ஆரம்பத்தில் சிறந்த பரதநாட்டியக் கலைஞராக விளங்கிய இவர் 2011-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பரத நாட்டியம் ஆடி வந்தார். அப்பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினையன் 'ரகுவிண்டெ சுவந்தம் ரசியா' என்ற மலையாளப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.
![](https://storage.googleapis.com/samugammedia-storage/cinesamugam-storage/2022/07/fc11e502-laxshmi-menon1-cinesamugam-1.jpg)
இப்படத்தில் இவர் சிறப்பாக நடித்ததன் மூலம் சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து வணிக ரீதியான வெற்றியைத் தேடித்தந்த 'சுந்தர பாண்டியன்' மற்றும் 'கும்கி' திரைப்படங்களின் மூலமாகத் தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார்.
இவரது நடிப்பில் வெளியாகிய ஏனைய படங்களாக 'ஐடியல் கப்பிள், சுந்தர பாண்டியன், கும்கி, குட்டிப் புலி, மஞ்சப்பை' போன்ற படங்களைக் குறிப்பிடலாம். நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் கைதேர்ந்த இவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
![](https://storage.googleapis.com/samugammedia-storage/cinesamugam-storage/2022/07/d69f137b-laxshmi-menon2-cinesamugam-1.jpg)
ஆனாலும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. ஏனெனில் இவருக்குப் பட வாய்ப்புக்கள் சரியாக அமையவில்லை. இதனால் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். மேலும் சமூக வலைத்தளங்களில் தன்னைக் குறித்த தகவல்களை அதிகம் பகிர்ந்து கொள்ளும் வழமை கொண்டவர்.
அந்தவகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். இப்படத்தில் சிவப்பு நிற டீ ஷர்ட்டும், வெள்ளை நிற பான்ட்டும் அணிந்து ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து அளித்திருக்கின்றார்.
![](https://storage.googleapis.com/samugammedia-storage/cinesamugam-storage/2022/07/8a9340df-laxsmi-menon3-cinesamugam-1.jpg)
எனினும் இப்புகைப்படத்தில் இவரது உடல் எடை சற்று அதிகமாக இருக்கின்றது. ஸ்லிம் ஆக திரையுலகிற்கு வந்த நம்ம லட்சுமி மேனன் தற்போது ஜிம்மிற்கு போற அளவிற்கு உடல் எடை அதிகரித்து இருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் "உங்களுக்கா இப்பிடி ஒரு நிலை? ஏன் இப்படி மாறிட்டீங்க?" என தமது கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
பிற செய்திகள்
- ஆத்திரமடைந்த சந்தானத்தின் ரசிகர்கள்…இடையில் நிறுத்தப்பட்ட படம்…காரணம் என்ன தெரியுமா..?
- பேய் சிரிப்பு சிரித்த மணிமேகலை…வேப்பிலை அடிக்கணும் எனக்கூறிய உசைன்…வைரலாகும் வீடியோ..!
- ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா..? வாயைப் பிளக்கும் திரையுலகம்..!
- உடல் எடையைக் குறைத்த கீர்த்தி சுரேஷ்…எதற்காக இப்படி..?புடவையில் வெளியான புகைப்படங்கள்…!
- தரையில் குப்புறப் படுத்து புகைப்படம் வெளியிட்ட மாளவிகா…என்னாச்சு என்ற கேள்வியுடன் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!