• May 12 2024

ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா..? வாயைப் பிளக்கும் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முன்னணி வகிக்கும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் விஜய் சேதுபதி. இவர் திரைப்பட நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் எனப் பன்முகப்பட் ட ஆளுமை கொண்டவராகவும் விளங்கி வருகின்றார். மேலும் 2010-ஆம் ஆண்டு வெளிவந்த 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற திரைப்படமே இவருக்கு கதாநாயகன் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து 'பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி' போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதுமட்டுமன்றி இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகும் 'ஜவான்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. மேலும் இந்தப் படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அட்லி வசித்து வந்ததாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். எனினும் முன்னர் இந்த வில்லன் வேடத்தில் ராணா நடிக்க உள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் சேதுபதி பற்றி தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது.

அதாவது இந்தப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாகக் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இவர் ஹிந்தியில் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். ஆனால் அவை இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இப்படத்திற்கும் விஜய் சேதுபதி இவ்வளவு தொகையைக் கோரியுள்ள விடயம் திரை வட்டாரத்தில் பெரிதும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அதுமட்டுமன்றி விஜய் ரசிகர்களுக்கும் இத்தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement