தமிழ் திரையுலகம் தாண்டி தமிழுலகம் வியந்து போற்றும் முக்கிய கவிஞரான வைரமுத்து திரைப்பாடல்கள் தாண்டி தமிழுக்கென பல படைப்புகளை கொடுத்தவர். இவ்வாறான இவர் சமீபத்தில் சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொள்வதுடன் அங்குள்ள விடையங்களை தனது x தல பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.
அவ்வாறே சமீபத்தில் அவரது x தல பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் " ரோம் நகரத்தில்
இருக்கிறேன் ரோமானியப் பேரரசின் எச்சங்களின் உச்சமான கொலோசியம் என்னும் வட்டரங்கின் வாசலில் நிற்கிறேன் ரோம் நகரத்தின் மையத்தில் கி.பி 70 முதல் 80 வரை சுதையாலும் கல்லாலும் கட்டப்பட்ட களம் இது இதுவொரு சண்டைக் கூடம் வீரர்கள் தம்மோடும் பகைவரோடும் சிறைவாசிகளோடும் அடிமைகளோடும் மரணதண்டனைக் கைதிகளோடும் சிங்கம் புலி யானை முதலை முதலிய விலங்குகளோடும் சாகும்வரை சண்டையிடும் கொலைக்களம் இது
இதற்கு மேற்கூரை கிடையாது 50,000 முதல் 80,000 பார்வையாளர்கள் அமர்வதற்கான படிமாடங்கள் கொண்டது வீரர்களோடு சண்டையிடப் பட்டினியால் பசியூட்டப்பட்ட சிங்கங்களும் புலிகளும் திறந்துவிடப்படுவதுண்டு கொலோசியத்தின் தொடக்கவிழாவின் முதல் நூறு நாட்களில் 9000 விலங்குகளும் 1000 வீரர்களும் பிளந்த மாமிசங்களாய் இறந்து விழுந்தகதை இருக்கிறது அங்கு சென்று நின்றதும் நிகழ்கால ஓசைகள் நிசப்தங்களாகிவிட்டன வீரர்களின் வாளோசைகளும் வெற்றியின் வாழ்கஓசைகளும் விலங்குகளின் உறுமல்களும் கதறல்களும் காலங்களின் ஓலங்களுமே என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கின இது சாவைச் சேமித்த உலகத்தின் பெரிய உண்டியல் " என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!