திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உயர்ந்த பவதாரிணியின் கையெழுத்தை போட்டு லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றதாக கங்கை அமரன், இசையமைப்பாளர் தீனா மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இவ்வாறு அவர் வைத்த குற்றச்சாட்டு இசையமைப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தீனா, கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதிலும் தானே தான் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக தங்களிடம் கரராக நடந்து கொண்டார் என கங்கை அமரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார்.
அது மட்டும் இன்றி தீனா மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளையும் கங்கை அமரன் முன் வைத்தார். அதன்படி அவர் கூறுகையில்,
இது இளையராஜா அமர்ந்திருக்க வேண்டிய இடம். எங்கள் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வு பற்றி உங்களுக்கு தெரியும் தானே. அதனால் அவரால் வர முடியவில்லை. அவருக்கு பதில் நான் பேசிக் கொண்டிருக்கின்றேன்.
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் ஒவ்வொருவருக்கு இரண்டு ஆண்டுகள் தான் பதவி என்பது விதி. ஆனால் இசையமைப்பாளர் தீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி நான்கு ஆண்டுகள் தலைவராக பதவி வகித்துவிட்டார்.
இனியும் தானே ஆளப்போவதாக கூறுகிறார். ஒருவர் பதவி வகிப்பதை காட்டிலும் அனைவரும் பதவி வகித்து சங்கத்தை திறம்பட வழி நடத்த வேண்டும் என்பது தான் இளையராஜா போன்றவர்களின் கருத்து.
அதுமட்டுமின்றி, இந்த ஜூனியனில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதாவது, கொரோனா காலகட்டத்தில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு பணம் கொடுத்ததாக கையெழுத்து போட்டு சில ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளார் தீனா.
அது இவர்களாக தயார் செய்த ஆவணங்கள். மேலும் மறைந்த பவதாரணியின் கையெழுத்தை அவருக்கே தெரியாமல் போட்டு இருக்கிறார்கள். ஆகமொத்தம் 80 லட்சம் ரூபாய் வரை அவர் பணத்தை சுருட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே பதவி போய்விட்டால் சிக்கி விடுமோ என்கின்ற பயத்தில் தான் மீண்டும் தலைவர் பதவியைப் பிடிக்க தீனா திட்டமிடுகிறார் என கங்கை அமரன் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
Listen News!