தமிழ் சினிமாவில் இளையதளபதி நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியான திரைப்படம் தான் கோட். இதனை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
முதல் நாளிலேயே உலக அளவில் சுமார் 126 கோடிகளை வசூலித்து இருந்தது. இதனால் முதல் வார இறுதிக்குள்ளேயே கிட்டத்தட்ட 500 கோடிகளை வசூலிக்கும் என கணக்கு போடப்பட்டது. ஆனாலும் நாளடைவில் இந்த திரைப்படம் தமிழ்நாட்டைத் தவிர வேறு இடங்களில் பெரிதாக எடுபடவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களை விட கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ஆனாலும் அங்கும் கோட் திரைப்படம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அதேபோல வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் பெரிய ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லையாம்.
இந்த நிலையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டை கொண்ட தெலுங்கு சினிமாவிலும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது கோட் திரைப்படம். தற்போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, கோட் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சூப்பர் கிங்ஸ், மகேந்திர சிங் தோனி என ஓவர் அட்வாண்டேஜ் கொடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகின்றது. மேலும் இந்த படம் ரிலீசான போது ஆந்திரா, தெலுங்கானா போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருந்தது. இதனால் படத்தின் வசூல் குறைந்ததாக கூறப்படுகின்றது.
கோட் படத்தில் தெலுங்கு டப்பிங் 16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 2.5 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் 13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!