சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் கீர்த்தி விஜய். மேலும் இவர் நாளைய இயக்குநர் உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதுமட்டுமல்லாமல் இவர் இயக்குநர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர் மாடலிங், நடனம் ஆகியவற்றில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அத்தோடு இவர் சாந்தனுவோடு இணைந்து நடனங்கள் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்து வருவார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் "பிரின்ஸ்" திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இப் படத்திற்கு பலரும் வாழ்த்துக் கூறி வரும் நிலையில் இவரும் வாழ்த்துக்கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவு ஒன்றையும் பதிவுசெய்துள்ளார்.
Listen News!