• Dec 05 2024

"பேபி ஜான் பாடலுக்கு நடனமாடிய தமன்னா..! கிவுட் ரியாக்சன் கொடுத்த கீர்த்தி சுரேஷ்-சமந்தா..!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடிப்பில் வெளியான "பேபி ஜான்" திரைப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 25ம் திகதி வெளியாக இருக்கிறது. அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 


பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தெறி'. இந்த படத்தில் விஜய்யுடன் சமந்தா, மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இந்தி ரீமேக்தான் 'பேபி ஜான்' திரைப்படம்.


சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான 'நைன் மடாக்கா' பாடல் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகை தமன்னாவும், வாமிகா கபியும் 'நைன் மடாக்கா' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ வைரலானநிலையில், நடிகை சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் அதற்கு ரியாக்சன் கொடுத்துள்ளனர். அதன்படி, இந்த வீடியோவை சமந்தா லைக் செய்துள்ளார். மேலும், கீர்த்தி சுரேஷ், 'இந்த ஜோடி எனக்கு பிடித்திருக்கிறது' என்று கமெண்ட் செய்துள்ளார்.


Advertisement

Advertisement