• Jan 15 2025

எனக்கு ஐ ப்ரோ கூட போடமுடியால... தூக்கமே இல்ல... மலையாள படம் குறித்து கீர்த்தி செட்டி சொன்ன தகவல்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

உப்பென்னா என்கிற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிர்த்தி ஷெட்டி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த கிர்த்தி ஷெட்டி தற்போது தமிழிலும் கவனம் செலுத்தி, வா வாத்தியார். லைப் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜீனி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


மலையாளத்திலும் பீரியட் படமாக உருவாகி வரும் 'அஜயண்டே ரெண்டாம் மோசனம்' என்கிற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. ஜிதின் லால் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்


இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கிர்த்தி ஷெட்டி கூறும்போது, மூன்று காலகட்டங்களில் நடக்கும் விதமாக இந்த கதையை உருவாக்கியதும் அதில் என்னுடைய கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்திருப்பதும் என்னை ஈர்த்தது. இதில் பக்கா மலையாள கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். மற்ற மொழிகளை விட மலையாளத்தில் தினசரி படப்பிடிப்பு நடைபெறும்; நேரம் ரொம்பவே அதிகம் ஒரு கட்டத்தில் எனக்கு ஐ ப்ரோ பயன்படுத்துவதற்கு கூட முடியாமல் போனது. 


அந்த அளவிற்கு பலரும் உனக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா என்று கேட்கும் அளவுக்கு குறைவான நேரம் மட்டுமே தூங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் என்னை விட அதிக நாட்கள் இந்த படத்தில் நடித்த நாயகன் டொவினோ தாமஸ் கொஞ்சம் கூட எந்தவித களைப்பும் இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இந்த படத்தில் நடித்ததை பார்க்கும்போது அவரது அர்ப்பணிப்பு உணர்வு எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement