• May 19 2024

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்- எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் சிவகார்த்திகேயன், போன்ற நடிகர்களுடனும் தெலுங்கில் பவன் கல்யாண், நாகர்ஜுனா என பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

மேலும் சமீபத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் தங்கையாக நடித்திருந்தார். அத்தோடு இவரது நடிப்பில் இறுதியாக சாணிக்காயிதம் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான விழா நேற்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான ஒரு உடையை அணிந்துள்ளார். அப்போது அவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement