• May 19 2024

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த உதயநிதி- செம குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருபவர் நடிகர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தை இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கியியுள்ளார். ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது, இத்திரைப்படம் ஜூலை 1 அன்று படம் திரைக்கு வரும் என்று நடிகரும், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

அதாவது, நேற்று உதயநிதி தனது திரைப்படமான ‘நெஞ்சுக்கு நீதி’ ட்ரைலர் வெளியிட்டு விழாவின் பேட்டியில் பேசுகையில், தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் படங்கள் குறித்து கூறினார்.,

அப்போது தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஜூலை 1 அன்று திரைக்கு வர உள்ளதாகவும், தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement