தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இப்படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்ததோடு சமீபகாலமாக ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது மித்ரன் இயக்கத்தில் 'சர்தார்' படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பல கெட்டப்களில் நடித்துள்ளார் கார்த்தி.
மேலும் தீபாவளி ஸ்பெஷலாக இன்றைய தினம் இப்படம் வெளியாகியுள்ளது.படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை இணையத்தில் குவித்து வருகின்றனர். கார்த்தியின் நடிப்பு படத்தில் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
மித்ரன் இயக்கமும் செம்மையாக இருப்பதாகவும், படத்தில் நிறைய ட்விஸ்ட் இருப்பதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.மேலும் படத்தில் கிளைமேக்ஸ் காட்சி அல்டிமேட்டாக இருப்பதாகவும் விமர்சனங்கள் இணைந்துள்ளன.சோஷியல் மீடியாவில் 'சர்தார்' படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
#Sardar Interval 👍
நல்லா போகுது. P.S.மித்ரன் அதிகமா வாட்சப் பார்வர்டு படிப்பார் போல. அதில் இருந்து நிறைய வருது. அடுத்து இங்க பிளான் பண்ணிட்டு இருக்க முக்கியமான விஷயத்தை பற்றி படம் பேசுது இதுவரை!!@Karthi_Offl 👌 முனிஸ்காந்த் one liners😂👌👌
Interval block 🔥 https://t.co/9y05fqGNzM
இந்தப்படத்திற்கு போட்டியாக இன்று 'பிரின்ஸ்' படமும் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் வழக்கமான காமெடிகள் படத்தில் இடம்பெற்று இருப்பதாகவும், ஆனாலும் படம் சுமாராகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!