• May 22 2024

பருத்தி வீரன் நடிகரோடு இணைந்து நடிக்க மறுத்த கார்த்தி- அடடே இவர் சித்தப்பு என்ற கேரக்டரில் நடிச்சவராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் கார்த்தி 2007ம் ஆண்டு வெளியாகிய பருத்தி வீரன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு அந்த படத்திற்காக ப்ரியா மணிக்கு தேசிய விருதும் கிடைத்தது.

சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகனாக கார்த்தி மாறினார்.இந்த படத்தைப் பார்த்து பிரமித்துப் போன பாரதிராஜா ‘என்னை எல்லோரும் கிராமிய இயக்குநர் என்கின்றனர். ஆனால் என்னால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியவில்லையே என நான் ஆதங்கப்பட்டேன்’ எனக் கூறி பாராட்டினார்.


இந்த படத்தில் நடித்த கார்த்தி, பிரியாமணி, சரவணன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டனர். படத்தில் சித்தப்பா – மகன் காம்பினேஷனில் சரவணனும் கார்த்தியும் கலக்கி இருப்பார்கள். அதன் பிறகு அந்த கூட்டணி வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்க வில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான கார்த்தியின் விருமன் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சரவணனை நடிக்க வைக்க இயக்குநர் முத்தையா விரும்பினாராம். ஆனால் அதை கார்த்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement