• Sep 21 2023

கணவன் பெயரை மாற்றிய ஆதிரை... நீலாம்பரியாக மாறிய கரிகாலன்... வெளியான சூப்பரான வீடியோ...!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. கதை மட்டுமன்றி கதாபாத்திரங்களின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.


அந்தவகையில் இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சத்ய பிரியா, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல்  அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


இந்த சீரியலில் கரிகாலன் கேரக்டரில் விமல் என்பவர் நடித்து வருகின்றார். அதேபோன்று ஆதிரை கதாபாத்திரத்தில் சத்தியா நடித்து வருகின்றார்.சீரியலின் கதைப்படி இவர்களுக்கு திருமணம் நடந்து விட்டது. இந்நிலையில்  இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருக்கின்றார்கள். அப்போது ஆதிரை கரிகாலனுக்கு "புஷ்பா அல்லது விமலா" என ஒரு பெயரை வைக்கின்றார். 


மேலும் கரிகாலனை 'படையப்பா' பட நீலாம்பரியாக மாறி நடித்துக் காட்டுமாறு கூறியிருக்கின்றனர். கரிகாலனும் அதனை சிறப்பாக நடித்து அசத்தி இருக்கின்றார்.

இதோ அந்த சூப்பரான வீடியோ..!

Advertisement

Advertisement

Advertisement