• Sep 21 2023

வெளியானது விஜயகாந்த் மகன் நடிக்கும் 'படைத்தலைவன்' திரைப்பட First Look... வீடியோ இதோ..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

கேப்டன் என்ற வார்த்தையை கேட்டாலே எமக்கு உடனே நினைவில் வருபவர் நடிகர் விஜயகாந்த். இவரைத் தொடர்ந்து இவரின் மகனான சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு நடித்திருந்தார் என்ற பெயரை கொடுத்தது.


இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில் காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் ஜானரில் உருவாகும் 'படைத்தலைவன்' திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கின்றார்.


இந்நிலையில் இன்றைய தினம் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த் தனது மகனின் படை தலைவன் திரைப்பட ப்ரோமோவை வெளியிட்டதோடு படத்தின் பெயரையும் வெளியிட்டார். அதுமட்டுமல்லாது ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் எனக் கேட்டு தனது இளையமகனின் படை தலைவன் திரைப்பட ப்ரோமோவை மூன்று முறை ஒளிபரப்ப வைத்தார். 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement