• May 20 2024

கிழிந்த உடையில் கமலின் இளைய மகள்... இது தேவை தானா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அக்ஷரா ஹாசன். இவர் உலகநாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் ஆவார். இவரின் திரையுலகப் பயணம் முதலில் பாலிவுட்டில் இருந்து தான் ஆரம்பமானது. இங்கு ஒரு சில படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்திய இருக்கின்றார்.


அதனைத் தொடர்ந்து அஜித்தின் 'விவேகம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து 'கடாரம் கொண்டான்' படத்தில் கர்ப்பிணியாக தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.  இதில் இவர் தனது கணவனுடன் காதல் காட்சிகளிலும் சரி, கர்ப்பிணியாக  தனது பிள்ளையை காப்பாற்றுவதற்கு போராடும் காட்சிகளும் சரி இவரின் நடிப்பு பல ரசிகர்களை உருக வைத்திருந்தது. இந்த படத்தை இவரின் தந்தையான கமலஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. 



இதனையடுத்து சமீபத்தில் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்னும் படத்தில் நடித்திருந்தார். வயது வந்தோருக்கான நாடகத் திரைப்படமான இந்த படமானது ராஜ ராமமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருந்தது. இதில் அக்ஷராஹாசன் உடன் உஷா உதுப் ,மால்குடி சுபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படமானது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை வென்றிருந்தது.



இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்தாலும் அக்ஷரா ஹாசனால் அவரது அக்கா ஸ்ருதிஹாசன் போல பிரபல நடிகையாக ஜொலிக்க முடியவில்லை என்று கூறலாம். இதனால் இவர் மற்ற நடிகைகள் போல தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்.



இந்தநிலையில் இவர் பனியன், கிழிந்த ஜீன்ஸ் அணிந்து சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "இது தேவை தானா?" என தமது கமெண்டுகளை கேலியாகப் பதிவு செய்து வருவதோடு லைக்ஸ்களையும் அள்ளிக்குவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement