• May 18 2024

பாக்கியாவுடன் ஒன்றாக நிற்கும் கோபி- அடடே நல்ல விளம்பரத்தில் தான் நடிச்சிருக்கிறார்கள் போல

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சதீஸ் மற்றும் சுஜித்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.இவர்களுடன் ரேஷ்மாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இது தவிர இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். கோபி பாக்கியாவுக்கு எதிராகச் செய்த துரோகங்கள் அனைத்தும் தெரிய வந்ததை அடுத்து வீட்டை விட்டு யார் வெளியேறப் போவது குறித்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.


மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் ரேஷ்மாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் கோபி எனப்படும் சதீஷை சமூகவலைத்தளவாசிகள் திட்டி வருகின்றனர்.இதனால் அவர் சீரியலில் இருந்து விலகப் போவதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாக்கியாவும் ஒன்றாகவும் சேர்ந்து விளக்கு ஏற்றுவது போல புகைப்படம் வெளியாகியுள்ளது.அதாவது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளனர். அதற்காகவே இருவரும் ஒன்றாக நின்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement