• Dec 03 2024

மாயாவுக்கு வலிக்காமல் பேசும் கமல்! அவரிடம் மட்டும் பாரபட்சம் காட்ட இப்படியொரு காரணமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்றாலும்  தப்பான ரூட்டில் பயணிப்பதாகவே ரசிகர்கள் எண்ணுகின்றனர். அதை சரியென கூறும் வகையில் மாயா, பூர்ணிமா செயற்படும் விதம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது.

எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனி, ஞாயிறு தினங்களில் கமலின் வருகைக்காக பலரும் காத்திருப்பர். காரணம் அந்த நாட்களில் தான் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும், தப்பு செய்த போட்டியார்களை கமல் வறுத்தெடுப்பார் என்றும் தான்.

அதன்படியே, பிக்பாஸ் போட்டியிலிருந்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்டார் பிரதீப் ஆண்டனி. ஆனாலும், அதுக்கு காரணம் மாயா பூர்ணிமாவின் டீம் தான் என்று ரசிகர்கள் தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல பிக் பாஸ் வீட்டிலுள்ள ஏனைய ஆண்களுக்கு  அதே ரூட்டைபயன்படுத்தும் நோக்கில் இருக்கிறார்கள் மாயாவின் புல்லி கேங்.


இந்த நிலையில், நடிகை மாயாவிடம் மட்டும் கமல்ஹாசன் பாரபட்சம் காட்டுவதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி கமல்ஹாசனின் விக்ரம் 2ல் அவர் நடிக்க உள்ளார். விக்ரம் 1ல் வந்துவிட்டு சென்றாலும் விக்ரம் 2ல் அவர் கமல் டீமில் நடிக்க உள்ளார். அதேபோல் எல்சியூவில் உள்ளார் . அப்படி இருக்க அவரிடம் மிக மோசமாக நடந்துகொள்வது சரியாக இருக்காது. அவரை கடுமையாக பேசுவது சரியாக இருக்காது. அதோடு படத்திலும் கமலுடன் மாயா சகஜம் ஆகிவிட்டார். இதுதான் கமல் மாயாவை கண்டிக்காமல் மேம்போக்காக விட காரணமாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.


Advertisement

Advertisement