• Apr 28 2024

பிறந்தநாள் பார்ட்டியில் ராதிகாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட கமல்ஹாசன்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் தான் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படம் தான் விக்ரம். இப்படம் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த நடிகராக வலம் வரும் இவர் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்த வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதனை அடுத்து மணி ரத்தினத்தின் இயக்கத்தில் தான் தன்னுடைய 234வது படத்தில் நடிக்கப்போகிறார் கமல் என உறுதியாகிவிட்டது.

ஆனால், இதுவரை KH233 படத்தை இயக்கப்போவது யார் என்று தெரியவில்லை. எச். வினோத் என கூறி வரும் நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய கமல் ஹாசன் பிரமாண்டமாக பார்ட்டி ஒன்றை அரங்கேற்றினார். இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்த பார்ட்டியில் பத்தல பத்தல பாடலுக்கு நடிகை ராதிகாவுடன் கமல் ஹாசன் குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளதைக் காணலாம்.

















Advertisement

Advertisement

Advertisement