• Jan 15 2025

கே. ஜி. எப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்த படம்... ஹீரோ யார் தெரியுமா?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

கே.ஜி.எப் படத்தின் மூலமாக இந்திய அளவில் பிரபலமானவர் தான் பிரஷாந்த் நீல். தற்போது இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் அஜித், பிரஷாந்த் நீல் உடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், விரைவில் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளிவந்தது. 


ஜூனியர் என்.டி.ஆர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது. தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ளது. 


Advertisement

Advertisement