• Jan 18 2025

அபிஷேக் பச்சன் படத்தை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்... ஷாருக்கான் தான் காரணம்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். அபிஷேக் பச்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார். 


திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த ஐஸ்வர்யா ராய் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் என்ற படத்தில் வில்லி ரோலில் நடித்திருப்பார். நடிகை ஐஸ்வர்யா ராய் பேட்டி ஒன்றில் பேசியபோது ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் நடித்து வெளி வந்த ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்க நிராகரித்ததாக கூறியுள்ளார். 


அபிஷேக்குக்கு அந்த படத்தில் ஜோடி இல்லை என்றும், நான் அந்த படத்தில் நடித்திருந்தால் ஷாருக்கானுக்கு தான் ஜோடியாக நடித்திருப்பேன் என்றும், அது அசவுகரியமாக இருந்திருக்கும் என கருதி நான் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என்றும் கூறினார்.

Advertisement

Advertisement