விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசன் ஆரம்பத்தில் விறுவிறுப்பு, சுவாரஸ்யம் அற்றதாக காணப்பட்ட போதும் தற்போது இதன் இறுதிக் கட்டத்தில் பரபரப்பான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.
பிக்பாஸ் சீசன் 8ல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தவர் தான் ராணவ். இவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த இறைவி படத்திலும் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்.
d_i_a
பிக்பாஸ் வீட்டுக்குள் ராணவ் என்ட்ரி கொடுத்த நாளிலிருந்து இறுதியாக வெளியேறும் வரையில் சக போட்டியாளர்களும் அவரை ஒதுக்கி வைத்திருந்தார்கள். அத்துடன் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை, அவர் ஒரு கூமுட்டை என்றெல்லாம் நேராகவே அவரை அவமானப்படுத்தி இருந்தார்கள்.
பிக்பாஸில் அவர் கீழே விழுந்து அடிபட்ட போதிலும் அவர் நடிக்கின்றார் என்று சொன்ன விஷயம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தியது. அதன் பின்பு ராணவிற்கு அதிக ஆதரவு பெருகியது. எனினும் அவர் எலிமினேட் ஆனது அன்ஃபேர் என்று விஜய் சேதுபதி டேக் பண்ணி பல போஸ்டுகள் போடப்பட்டன.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ராணவ் விஜய் டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதன்போது அவர் ரசிகர்களின் பேராதவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தான் நடித்த படத்திற்கான ஷூட்டிங் முடிவுற்று தற்போது அதற்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.
இதேவேளை, பிக்பாஸில் ராணவ் ரீ என்ட்ரி கொடுப்பாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!