• Feb 05 2026

யார் வேணும்னாலும் வீட்டுக்கு வரலாமா.? புதிய தொழிலை ஆரம்பித்த ஆல்யா மானசா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக, லட்சக்கணக்கான ரசிகர்களின்  உள்ளத்தை கவர்ந்தவராக வலம் வருபவர் ஆல்யா மானசா. இவர் தன்னுடைய இயல்பான நடிப்பாலும், துறுதுறுப்பான செயற்பாடுகளினாலும்  ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார். 

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம்  சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். இன்று பிரபல சீரியல் நடிகையாக காணப்படுகிறார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் இவருக்கு வரப் பிரசாதமாக அமைந்தது. 

அதன் இரண்டாவது தொடரிலும் நடித்தார்.  எனினும் அந்த தொடரில் இருந்து பாதியில் வெளியேறி சன் டிவி பக்கம் சாய்ந்தார். அதில் இனியா என்ற சீரியலில் நடித்து  மேலும் பிரபலம் அடைந்தார். அதற்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சிங்கிள் பசங்க நிகழ்ச்சி நடுவராக பங்கேற்றார். 


மேலும் பல  விருது விழாக்கள், போட்டோஷூட், தனியார் நிகழ்ச்சி என பிசியாக காணப்படுகின்றார் ஆல்யா மானசா.  சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களையும் பதிவிட்டு வருகின்றார்.  


இந்த நிலையில், ஆல்யா மானசா புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.  அதாவது 'வாட்ஸ் குக்கிங்' என்ற பெயரில் ஒரு புதிய சோவை தனது youtube பக்கத்திற்காக தொகுத்து வழங்க உள்ளாராம்.

 அதற்கான ஹோம் டூர் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  மேலும் தான் வீட்டில் தனியாகத்தான் இருப்பதாகவும்  அதனால்தான் இந்த ஐடியா தோன்றியதாகவும், யார் வேண்டும் என்றாலும் வரலாம் சமைக்கலாம் என கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement