• Feb 12 2026

வெற்றி நடை போடும் “தலைவர் தம்பி தலைமையில்”... நெகிழ்ச்சிப் பதிவினை வெளியிட்ட ஜீவா

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் ஜீவா நடித்த “தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 


படம் வெளியாகிய சில நாட்களிலேயே திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டதுடன், வசூலிலும் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜனவரி 15, 2026 அன்று பொங்கல் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் வெளியான “தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படம், ஆரம்பத்திலேயே குடும்ப ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பண்டிகை கால வெளியீடு என்பதால், கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பல்வேறு தரப்பட்ட ரசிகர்களும் படத்தை ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.

படத்தின் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதும், திரையரங்குகளில் நல்ல கூட்டம் காணப்படுவதும், படத்தின் வெற்றியை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.


படம் வெளியான முதல் வாரத்திலேயே நல்ல வசூலைக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கு

இந்த வசூல் வெற்றி, படக்குழுவினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஜீவாவின் திரை வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான வெற்றிப் படமாக “தலைவர் தம்பி தலைமையில்” அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மனம் நெகிழ்ந்த நடிகர் ஜீவா, தனது உணர்ச்சிகளை X தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் பொழிந்த அளவற்ற அன்பு மற்றும் பாசத்தால் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் இருக்கிறேன். ஒவ்வொரு செய்தியும் விமர்சனமும் என்னை உற்சாகமாக்கி உள்ளது. மேலும் என்னைப் பற்றி மீம்களும் கூட அன்புடனும் ஆதரவுடனும் வந்துள்ளன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு வெளியானதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஜீவாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement