• Apr 15 2026

சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென கைதாகும் விஜயா.? பரபரப்பு திருப்பம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் உண்மை வெளிவந்ததை தொடர்ந்து தொடர் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. விஜயா, ரோகிணியை வீட்டை விட்டு துரத்தியதையடுத்து, அவர் சிந்தாமணியிடம் அடைக்கலம் புகுந்துள்ளார். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிந்தாமணி, ரோகிணியை வைத்து விஜயாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார்.

அதன்படி, ரோகிணி வீட்டிற்கு வந்த போது மனோஜ் மற்றும் விஜயா சேர்ந்து அவரை மீண்டும் வெளியே துரத்துகின்றனர். இந்த சம்பவத்தை சிந்தாமணி வீடியோவாக பதிவு செய்து, பின்னர் அதை பயன்படுத்தி போலீசில் புகார் அளிக்க திட்டமிடுகிறார். தொடர்ந்து மனோஜ், ரோகிணியிடம் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட வற்புறுத்துகிறார். இதனை ரோகிணி மறுத்ததை அடுத்து, நிலைமை மோசமாகிறது.


அதே நேரத்தில்  விஜயாவுக்கு சிந்தாமணி ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கின்றார். இதெல்லாம் எதற்கு என விஜயா கேட்க, டைவர்ஸ் கேஸ் என்று அலைவீர்கள் அதற்கு இந்த பணம் உதவியா இருக்கும் என்று கொடுத்துச் செல்கின்றார்.

இறுதியில் சிந்தாமணி எடுத்த வீடியோவை ஆதாரமாக கொண்டு, வரதட்சணை கொடுமை புகாரின் பேரில் ரோகிணி போலீசில் புகார் அளிக்கிறார். அதன் அடிப்படையில் போலீசார் விஜயாவின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்கின்றனர். விஜயா இந்த பிரச்சினையிலிருந்து தப்புவாரா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Advertisement

Advertisement