• Feb 20 2026

பிக் பாஸ் டைட்டிலை தட்டித் தூக்கிய திவ்யா கணேஷ்.! மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல் துறையின் மூலம் ரசிகர்களிடம் பரவலாக அறிமுகமானவர் திவ்யா கணேஷ். இவருடைய நடிப்பு, வெளிப்படை தன்மை மற்றும் துணிச்சலான அணுகுமுறை மூலம் குறுகிய காலத்திலேயே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார்.

தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் குடும்ப ரசிகர்களின் ஆதரவை பெற்ற திவ்யா கணேஷ், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தார். அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் இவருக்கு மேலும் பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது.

சீரியல்களில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்பட வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் திவ்யா கணேஷ். அவர் சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்த அவர், தனது நேர்மையான விளையாட்டு மற்றும் துணிச்சலான அணுகுமுறையால் மக்களின் ஆதரவைப் பெற்றார்.


இந்த நிலையில்  பிக் பாஸில் திவ்யா ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் 77 நாட்களுக்கு கிட்டத்தட்ட 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை சம்பளமாக சம்பாதித்துள்ளார். மேலும் இவருக்கு டைட்டில் வின்னருக்கான 50 லட்சம் பணமும் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

திவ்யாவுக்கு பிக் பாஸில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக கூறப்படுவதுடன், சமூக வலைதளங்களில் திவ்யா கணேஷ்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வெல்வது இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement